2025 ஜூலை 09, புதன்கிழமை

நாளை 18 மணிநேர நீர் விநியோகத்தடை

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை ஜாஎல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 18 மணிநேர நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதென, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களனி பிர​தேச நீர்க்குழாய் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசியத் திருத்த வேலைகள் காரணமாகவே நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களான ஏக்கல, கந்தானை, ஆனியாகந்த, படகம, துடெல்ல, நிவந்தம, மாஎலிய, மஹபாகே, திக்கோவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுனுகம, போபிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணியிலிருந்து மறுநாள் 27ஆம் திகதி மாலை 3 மணிவரை நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .