2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

Editorial   / 2020 மே 01 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

 
நாவலப்பிட்டி  நகரசபை தலைவர் உட்பட 7 பேர் நேற்று (30)  மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
 
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், வட்டவளை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் இணைந்து குறித்த சுற்றுலா விடுதியை  சுற்றிவளைத்தனர்.
 
பொலிஸாரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை கைதுசெய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்கின்றது.
 
சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 
 
கைதானவர்கள் இன்றைய தினம் (01.05.2020) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X