2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

George   / 2016 ஒக்டோபர் 17 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் இடம்பெறும் பிறிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்தியாவுக்கு சனிக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி, இந்தியப் பிரதமரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோவா தாஜ் எக்ஸோட்டிகா ஹோட்டலில் சந்தித்தார்.

ஜனாதிபதியின் வருகையை கண்டு மகிழ்ச்சியடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் டுவீட் செய்திருந்தார்.

“ஒரு நண்பரின் வருகை... பிறிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டுக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு வருகை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி” என, மும்மொழிகளிலும் டுவீட் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது விஜயத்தை முடித்துக்கொண்ட ஜனாதிபதி, நாடு திரும்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X