2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாமல் உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை

George   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஷெஹான் சாமிக சில்வா

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேரின் 15 வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு மேலதில நீதவான் அருண புத்ததாச அனுமதி வழங்கியுள்ளார்.

ஹலோ கோர்ப் நிறுவனத்தின் பங்குகள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்குச் சொந்தமான 15 வங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்வதற்கான அனுமதியை கொழும்பு மேலதிக நீதவான் அருண புத்ததாச வழங்கியுள்ளார்.

இதன்படி, குறித்த நபர்களின் ஒன்பது வங்கிகளில் காணப்படும் 15 கணக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன. சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஹலோ கோர்ப் நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ளதாக, வசந்த சமரசிங்கவினால் பதியப்பட்ட குற்றச்சாட்டுக்கமைய நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X