2025 ஜூலை 09, புதன்கிழமை

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சுகாதார அமைச்சரை சந்தித்தார்

R.Tharaniya   / 2025 ஜூலை 08 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஜீஸ் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையே சுகாதார அமைச்சில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால சமூக, பொருளாதார, கல்வி, விளையாட்டு மற்றும் அரசியல் உறவுகள் மற்றும் சுகாதாரம், சுதேச மருத்துவம், சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா துறைகள் தொடர்பான நடவடிக்கைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய ஊடக நிகழ்ச்சிகளின் பரிமாற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை பரிமாறிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்கூறிய அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கும் என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .