Freelancer / 2025 ஏப்ரல் 19 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 17ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கு ம் தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளுமாறும், பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது ஏற்பட்ட இடையூறு மற்றும் துயரம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் பொதுமக்கள் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் கலந்துகொள்வதை உறுதி செய்வதே பிரதான நோக்கம் என்று, பாதுகாப்பு செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.
37 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
30 Mar 2026