2025 ஜூலை 09, புதன்கிழமை

புதிய வரி விதிப்பு செய்தியில் உண்மை இல்லை

Freelancer   / 2025 ஜூலை 08 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் முதல் புதிதாக 18% VAT வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். 

இந்த வரி விதிப்பு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும் என அவர் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே குறித்த வரி அமுலுக்கு வருவதாகவும், புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .