Editorial / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் நிலைய சிறைகூடத்துக்குள் சந்தேக நபர் ஒருவர் போதைபொருள் பயன்படுத்துவதற்கு இடமளித்த சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி மற்றும் பெண் சார்ஜன்ட் ஆகியோர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோய்ன் போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்ப்பட்ட சந்தேக நபர், பொலிஸ் நிலைய சிறைகூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அதனை பயன்படுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், கடமை மீறிய குற்றச்சாட்டில் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர்கரின் தலைமையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸ் தலைமையக விசேட விசாரணை பிரிவின் உடாகவும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
34 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago
5 hours ago