2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பத்திரிகை நிறுவனத்துக்கு டிவி - வானொலி முடியாதா?

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் வானொலி என்பவற்றை நடத்திச் செல்லும் நிறுவனத்துக்கு பத்திரிகையையும் நடத்திச் செல்வதற்கு தடை விதிக்க எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

'பத்திரிகை நிறுவனத்துக்கு தொலைக்காட்சி அல்லது வானொலியை நடத்திச் செல்ல தடைவிதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை' என ஊடகதுறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மீது கட்டுபாடு விதிக்கவுள்ளதாக இவ்வாறாக பொய் பிரசாரங்கள் பரவிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஊடக நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு தொடர்பில் சமூகத்தில் விரிவான எண்ணப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X