Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 மே 09 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான தனது 14 வயது மருமகனை, பரீட்சை ஒன்றில் தோற்றுவதற்காக அழைத்துச் சென்ற மாமா முறையான ஒருவருக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், வழக்குத் தொடர உள்ளதாக, கஹத்துட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், மத்தேகொட- பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடொன்றுக்கு இரகசியமாக வந்துள்ளார். அங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்குச் செல்லும் எதிர்பார்ப்பில் இருந்த 14 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்குச் சென்றுள்ளமை தெரியவந்தள்ளது.
குறித்த மாணவன், பரீட்சைக்குத் தோற்றியதை, அதே பாடசாலையில் கல்வி பயிலும் மற்றுமொரு மாணவன் கண்டுள்ளார்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச பாடசாலை ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட பரீட்சையிலேயே குறித்த மாணவன் தோற்றியுள்ளார்.
அப்பரீட்சையில், சுமார் 6,000 மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago