Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் நிஹால் செனவிரத்னவின் திடீர் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனுதாபம் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் நிஹால் செனவிரத்னவின் திடீர் மறைவுக்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இரண்டாம் உதவிச் செயலாளராக தனது சேவையை ஆரம்பித்த அவர் படிப்படியாக வந்து செயலாளர் நாயகப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
1981 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், 1994 ஆண்டு வரை சிறந்த சேவைகளை முன்னெடுத்தார். அவர் ஓய்வு பெற்றதன் பின்னரும் கூட, பாராளுமன்ற செயல்முறையை வலுப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அவர் பல்வேறு வழிகளில் சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளார். அவர் முன்னெடுத்த, ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, அனைவரின் சார்பாகவும் அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
17 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago