Editorial / 2019 ஜூலை 23 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள, தனியார் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதியட்டைகளை, இணையம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியட்டைகள் அனைத்தும் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதியட்டைகளை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் பதன்கிழமையின் பின்னர், தனியார் விண்ணப்பதாரிகளின் அனுமதியட்டைகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், அனுமதியட்டைகள் கிடைக்காதவர்கள் இணையம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தர பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இதில் 3,37,704 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago