Editorial / 2019 ஜூலை 24 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்களாக, பலரது பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவென, அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் நவீன் திசாநாயக்க, அனோமா கமகேயின் பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, உங்களது பெயர் முன்வைக்கப்படவில்லையா? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, தன்னுடைய பெயரை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தான் இப்போது இருக்கும் நிலை தனக்கு போதுமென்றும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago