Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மார்ச் 08 , மு.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் தனது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக கொவிட்-19 நோய்த் தாக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ அரசாங்கத்துக்குச் சான்று வழங்கிய ஊடகங்கள், இன்று அரசாங்கத்தின் குறைபாடுகளைப் பகிரங்கப்படுத்தாமல் மௌனம் காப்பது கவலைக்குரியது என்றார்.
கொழும்பில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்இ
தேசிய பொருளாதாரம், இவ்வருட இறுதியில் பாரிய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் .பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் சிறந்த கொள்கைத் திட்டம் ஏதும் கிடையாது எனத் தெரிவித்த அவர், தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் விளைவை, நாட்டு மக்கள் இவ்வருட இறுதியில் அறிந்து கொள்வார்கள் என்றார்.
'அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில், 2010 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அச்சிடாத அளவுக்கு நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இவ்வாறான தன்மை, நாட்டின் நிதி நெருக்கடி நிலையை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முறையற்ற பொருளாதார முகாமைத்துவ கொள்கையை முன்னெடுக்கின்றது'
நல்லாட்சி அரசாங்க காலத்தில் வகுக்கப்பட்ட புதிய பொருளாதார முகாமைத்துவ கொள்கைகள் அனைத்தையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது எனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, சிறந்த விடயங்களை செயற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. சர்வதேசத்தில் அரச முறை கடன்களைப் பெற முடியாத அளவுக்கு அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறான தன்மை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
இளம் தலைமுறையினர், அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினார்கள். இன்று இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், வேலையில்லாப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் நாட்டில் தொழிற்றுறையை மேம்படுத்த வேண்டும். ஆனால், தற்போது வெளிநாட்டு முதலீடுகளால் கூட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றார்.
'அரசாங்கத்தின் பலவீனத் தன்மையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றினைந்து சுட்டிக்காட்ட வேண்டும். அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஊடகங்கள், அரசாங்கத்தின் குறைப்பாட்டைச் சுட்டிக்காட்டாமல் மௌனம் காப்பது கவலைக்குரியது. அரசாங்கம், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago