Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
A.P.Mathan / 2020 மார்ச் 22 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறித்த மாணவர்களின் விவரங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை மட்டுமே இந்த இலவச இணையச் சேவை அமுலில் இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago