S. Shivany / 2021 ஜனவரி 25 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன், சுமார் 300 பேர் வரை தொடர்பில் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பல்வேறு கலந்துரையாடல்களில் அமைச்சர் பங்கேற்றிருந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் அமைச்சருடனான கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர்.
எனவே, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுய தனிமையில் ஈடுபடுமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார்.
அமைச்சரின் கணவர் மற்றும் மகள் ஆகியோருக்கு முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
26 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
56 minute ago