2026 மார்ச் 07, சனிக்கிழமை

பஸ் - ஓட்டோ நேருக்கு நேர் மோதல்: 13 பேர் பலி

J.A. George   / 2021 மார்ச் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் பஸ் - ஓட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் புரானி சாவ்னி பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, எதிரே வந்த ஓட்டோ மீது மோதியது.

இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 8 பெண்கள், ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மேலும் 4 பெண்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .