Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், நடப்பாண்டுக்காக, கடந்த 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டம் (பாதீடு) இரண்டாம் மதிப்பீட்டு மீதான முதலாவது வாக்கெடுப்பு, இன்று (12) மாலை 5 மணிக்கு நடைபெறும்.
வரவு-செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்போம் என ஒன்றிணைந்த எதிரணி கங்கணம் கட்டியுள்ள நிலையிலேயே, இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆறு நாள்கள் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையிலேயே, மிகவும் பரப்பரப்பான சூழ்நிலையில், வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
இந்த வரவு- செலவுத்திட்டத்தை எதிர்க்கவுள்ளதாக, ஜே.வி.பி., ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன அறிவித்துள்ள நிலையிலே, திட்டத்தைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தை ஒன்றிணைந்த எதிரணி வகுத்துவருகின்றதென அறியமுடிகின்றது.
இதேவேளை, வரவு-செலவுத்திட்டத்தைத் தோற்கடித்து விரைவாக பொதுத்தேர்தலுக்குச் செல்வதற்கான காய்நகர்த்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து முன்னெடுத்துள்ளனரென, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதீட்டைத் தோற்கடிப்பதற்கு, ஜே.வி.பியும் ஒத்துழைப்பு நல்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பிக்கும், மஹிந்த அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, வரவு-செலவுத்திட்டத்தை தோற்கடித்து, உடனடியாக பொதுத்தேர்தலுக்குச் செல்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இன்றைய வாக்கெடுப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விடுவதற்குத் தீர்மானித்துள்ளனரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago