Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இல்லாது செய்ததில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும்பங்கு இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (12) வாக்கெடுப்பின்போது, அதற்கு எதிராக வாக்களித்து, இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முதல்படியை எடுத்துவைப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலையைகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மாகாண சபைத் தேர்தலை காலந்தாழ்த்தி வருவதுபோல், பொதுத் தேர்தலையும் அரசாங்கம் காலந்தாழ்த்தும். தேர்தலை நடத்தினால் தோல்வியடைவார்கள் என்பதால், தேர்தலை நடத்தக்கூடாதென ஐ.தே.க அரசியல் ரீதியில் தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாகவும் இதன்போது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சுமத்தினார்.
நீதிமன்றம் தலையீடுகளை மேற்கொண்டு, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த உத்தரவிட வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை, தோற்கடிக்கப்போவதாக ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிவருகின்றனர் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை முடிந்தால் தோற்கடித்துக் காட்டுங்கள் என, இதன்போது ரோஹித் எம்.பி சவால் விடுத்தார்.
வரவு-செலவுத் திட்டத்தை கொண்டு மக்களின் கழுத்தை நெரித்துவிட்டதாகவும், ஐ.தே.கவின் வரவு-செலவுத் திட்டம் ‘பிக்பொக்கட்’ வரவு-செலவுத் திட்டமெனவும் இதன்போது கடுமையாக விமர்சித்த அவர், இதற்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, மக்கள் மீண்டும் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யக்கூடாதெனவும் கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரியனைக்கு ஏற்றுவோம் என்றார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago