2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா..

Freelancer   / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (11) பிற்பகல் தெரிவுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுர பிரியதர்ஷன யாப்பா ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

கோப், கோபா உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அப்போது சபாநாயகர் தனது உடன்பாட்டை தெரிவித்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஆனால் கோப், கோபா உள்ளிட்ட பல குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு இன்னும் எம்.பி.க்கள் நியமிக்கப்படவில்லை.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு முடிவடைந்தவுடன், ஏறக்குறைய எழுபது பாராளுமன்றக் குழுக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ரத்து செய்யப்பட்ட பல குழுக்கள் ஏற்கெனவே தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X