Mayu / 2024 ஜூன் 05 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நரேந்திர மோடி பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மோடி இராஜினாமா கடிதத்தை அளித்தார். மோடி அமைச்சரவையின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்துவிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையின் இராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றார். 17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, ஜூன் 8-ம் திகதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.
8 minute ago
47 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
47 minute ago
56 minute ago
1 hours ago