Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 07 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தளர்வை ஏற்படுத்துதற்கு சர்வதேசம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளதெனத் தெரிவித்துள்ள சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, இது குறித்து, தொடர்ந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
2015ஆம் ஆண்டு ஆட்சி தொடர்ந்திருந்தால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு கைவிலங்கு மாட்டி மின்சாரக்கதிரைக்குக் கொண்டுபோயிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில், நேற்று (06) கேள்வியெழுப்பிய, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, “ஜெனீவாவில் இலங்கையை இன்று பலவீனபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு, இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கை மூலமாகவே இந்த நிலைமை உருவாகியுள்ளது. ஆகவே, இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது” என வினவினார்.
இதற்குப் பதில் தெரிவித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல
“யுத்தக் குற்றங்கள் குறித்து கடந்த 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூலமாக பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதனை அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டிலும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால் அவருக்கு எதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்து அவருக்கு கைவிலங்கு மாட்டவும், அவரை மின்சாரக்கதிரைக்கு கொண்டு சென்றிருப்பார்கள்” என்றார்.
“எனினும், நாட்டின் அதிஷ்டமும் அவரது அதிஷ்டமும் இருந்த காரணத்தால் 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தோம். அதனால் அவரும் நாடும் மக்களும் காப்பற்றப்பட்டனர். அவரையும் நாமே பாதுகாத்துள்ளோம். மேலும், இந்தப் பிரேரணையை இலகுபடுத்துவது குறித்து சர்வதேச நாடுகளுடன் நாம் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றோம். அதேபோல் இந்தப் பிரேரணையில் இருந்து விடுபடவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சர்வதேச நகர்வுகளை நாம் சரியாக முகாமைத்துவம் செய்து வருகின்றோம்” என்றார்.
16 minute ago
38 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
38 minute ago
2 hours ago
4 hours ago