Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:49 - 1 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - அருவக்காட்டில், குப்பைகளைக் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளத்தில் வாழும் மூவின மக்களும், கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை இன்று (13) வெளியிட்டனர்.
குறித்த பகுதியில், மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இன்றையதினம் (13) புத்தளத்தில் கறுப்புக் கொடிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம், கரைத்தீவு, கற்பிட்டி, முந்தல் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாலர் பாடசாலைகள், அரச, தனியார் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலகங்களில் கடமைபுரியும் அரச உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டியணிந்து, பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்றனர்.
இதேவேளை, நாளையதினம் (14) புத்தளத்திலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களையும் புனித நோன்பு நோற்குமாறும், அனைத்துப் பள்ளிவாசல்கள், அரபு மதரஸாக்கள் என்பனவற்றில் விசேட துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Saud Saif Wednesday, 13 February 2019 11:53 AM
No one can destroy future of a community for sake of good life of another community...It's right opposite of Humanity.... So # We Stand against dumping garbage in puttalam and #Support For Clean Puttalam
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago