Editorial / 2025 ஜூன் 04 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்போது கிடையாது. ஆனால் இந்த பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்கான மாற்றுத்திட்டங்கள் 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சி எம்.பி.ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நீதிமன்றத்துக்கு நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கு அமைச்சரவையில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றார்.
3 minute ago
9 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
19 minute ago