Kogilavani / 2021 மார்ச் 19 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்
பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலைச் செய்த இருவரை, திம்புள்ளை பத்தனை பொலிஸார் இன்று(19) கைதுசெய்துள்ளனர்.
பெண்ணொருவரும் அவரது மகளும் இணைந்தே, குறித்தப் பெண்ணை படுகொலைச் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில், திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
மிகநீண்ட காலமாக நிலவிவந்த குடும்பப் பகை காரணமாகவே, இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணை கோடரியால் வெட்டிப் படுகொலைச் செய்த இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள் நிலையில், தோட்ட மக்கள் இணைந்து குறித்த இருவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026