2025 ஜூலை 09, புதன்கிழமை

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விநியோகத்தின் வீதம் குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டதால், கடந்த வருடம் இலங்கை சந்தைகளில் பெரிய வெங்காய விநியோகம் குறைவடைந்திருந்தது.

எனினும் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், துருக்கி, நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோர் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்கள் முன்வருவதில் தயங்குவதாலேயே மீண்டும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .