2026 ஜனவரி 21, புதன்கிழமை

போராட்டக்காரர்கள் மீது மின்சாரத்தை நிறுத்திவிட்டு தாக்குதல்

Nirosh   / 2022 மார்ச் 31 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதோடு கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம் என்பனவும் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனத்தின் மீதும் கல்லெறிந்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X