Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் ரயில்வே தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டால் மாத்திரமே, பேச்சுவார்த்தையில் ஈடுபடபோவதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
ரயில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சிலர் கடமைக்கு திரும்ப விருப்பம் கொண்டுள்ளபோதிலும், அவர்களுக்கு சில தரப்பினர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். ஆகவே, இது பாரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது என்றார்.
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், இன்று (03) 15 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதியமைச்சர் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில்வே தொழிற்சங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை, இன்று (03) எட்டாவது நாளாகவும் தொடர்கிறது.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago