2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் கைது

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேகநப​ர்கள் இருவரை, மீட்டியாகொட - கிரலகல பகுதியில் வைத்து, பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர்.

மீட்டியாகொட பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்து, ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 13, 100 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 53ஐ கைப்பற்றியதோடு, போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய இயந்திரத்தையும் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும், இன்று பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .