2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம்-மன்னார் வீதி விவகாரம்: மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில் இருந்து மன்னார் வரை வில்பத்து சரணாலயத்தின் ஊடாகச் செல்லும் வீதியை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு, உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது  

குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்படுமாயின், வனாந்தரத்துக்கு மாத்திரமல்ல விலங்குகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பு குறிப்பிட்டுள்ளது. ஆகையால், அபிவிருத்தி செய்யும் அந்தத் தீர்மானத்தை கைவிடுவதற்கு உத்தரவிடுமாறே, அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.  

மனுவில் பிரதிவாதியாக, அமைச்சர் ரிஷாட் பதியுதின் குறிப்பிடப்பட்டுள்ளார்.  குறிப்பிட்ட மனு, நேற்று பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, அந்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான, சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, அந்த வீதியை, மக்கள் நீண்ட காலமாக, பயன்படுத்தப்படாமையால், அதனை அபிவிருத்தி செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எந்தத் தடையும் இல்லை என, பிரதிவாதியான அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி குறிப்பிடப்பட்டுள்ளார். 

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த மனுவை ஜூலை 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு திகதி குறித்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X