Gavitha / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
கடந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்ட விபத்துகளை விட, இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற விபத்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம், கடந்த 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் மாத்திரம் 479 விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றுள் 113 வீதி விபத்துகளும் உள்ளடங்குவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டுமிடத்து, 13 சதவீதம் குறைவடைந்துள்ளதாக, தேசிய வைத்தியசாலையின் மக்கள் தொடர்பாடல் அலுவலகர் புஷ்பா ரம்யானி சொய்சா, நேற்று தெரிவித்தார். இதேவேளை, பட்டாசு கொழுத்தும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட 12 பேர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இந்தத் தொகை கடந்த வருடம் 10ஆக இருந்ததாகவும் அவர் கூறினார். “வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 45 பேரும் கைகலப்புகளில் ஈடுபட்டதன் காரணமாக காயமடைந்த 48 பேரும், கீழே விழுந்தமையினால் காயம் ஏற்பட்ட 109 பேரும் என்று, மொத்தமாக 179 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் 43 சதவீதத்தாலும் வீதி விபத்துக்கள் 16 சதவீதத்தாலும் குறைவடைந்துள்ளது. மற்றைய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 52 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago