2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புத்தாண்டுக்கு முன்னர் “பெட்டி“ இல்லை

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்போதைய நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“தேர்தல் ஏற்பாடுகளுக்கு ஆகக்குறைந்தது 75 நாட்கள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தல் தொகுதிகள் எவை என்பதுக் கூட இதுவரை தெரியாமலேயே உள்ளன. இவ்வாறனெதொரு நிலையில், எந்தவொரு தேர்தலையும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் நடத்துவது என்பது சாத்தியமற்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

“தேர்தலை நடத்தும் அதிகாரம் எம்மிடம் இல்லை. நாடாளுமன்றத்திடமும் இல்லை. உள்ளுராட்சி மன்ற அமைச்சிடம்தான் அந்த அதிகாரம் உள்ளது. எந்தவொரு தேர்தலும் குறித்த தினத்தில் நடத்தப்படாவிட்டால் அது ஜனநாயகத்துக்கு பாதகமானது என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கூறியுள்ளது.

ஜனநாயகத்துக்கு பாதகம் ஏற்படுவதால், வாக்குரிமை குறித்து மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைமையைத் தோற்றுவிக்கலாம்.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தக்கூடிய சாதக நிலைமை தற்போது குறைவாகவே காணப்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .