2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிரதமர் ரணில் சீனாவுக்கு நாளைப் பயணம்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனக் குடியரசின் அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், நாளை (06), சீனாவின் பெய்ஜிங் நகரத்துக்குப் பயணமாகவுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவையாகும்.

இந்த விஜயத்தின் ஊடாக, இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கேகியங் ஆகியோரையும் உயர்மட்டத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

இதன்போது, இருநாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை வலுப்படுத்தல் மற்றும் முறையான ஓர் ஒழுங்குமுறைகளை உருவாக்கிக்கொள்ளும் நோக்கில் முதலீடு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தல், சிறுநீரக நோயாளர்களுக்காக நடத்தப்படும் நடமாடும் நிவாரணச்சேவை, விளையாட்டு ஒத்துழைப்பு, அபிவிருத்தி மேம்பாடு, நிதிச்சேவை, நீர்வழங்கல் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் உள்ளிட்ட பல்வேறான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .