2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பிரதமர் ரணில் ஜப்பானுக்கு விஜயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டோக்கியோவிலிருந்து மேனகா மூக்காண்டி   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை (10), ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.   

இந்த விஜயத்தின்போது, ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபேயை (Shinzo Abe) நாளையதினம் (12) பிரதமர் ரணில் சந்திக்கவுள்ளார். அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலும் ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்படவுள்ளன.  

அத்துடன், மேலும் பல அரசியல் தலைவர்களையும் வணிகத்துறை சார் நிபுணர்களையும், பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினரை, அன்புடன் வரவேற்பதாகவும் இந்த விஜயத்தின் மூலம், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுமெனவும் எதிர்பார்ப்பதாக, ஜப்பான் அரசு தெரிவித்தது.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், விசேட பணிப்பொறுப்புகள் அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிகச் செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டி, விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் விஜயம் செய்யவுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X