2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிரித்தானியாவுக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஊவா மாகாணத்துக்கு இழைக்கப்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு கோரி, பெரிய பிரித்தானியாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்” என்று, ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத், தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

பிரித்தானியாவினால் துரோகிகள் என முத்திரைக் குத்தப்பட்ட மொணரவில் கெப்பட்டிப்பொல உள்ளிட்ட 19 வீரர்களையும் தேசப்பற்றாளர்கள் என்று பெயர்குறிப்பட்டமை, ஊவாவைச் சேர்ந்த எங்களுக்கு பெரும் அபிமானமாகும்.  

“1817 தொடக்கம் 1818 வரையிலும் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டத்தின் போது, ஊவாவைச் சேர்ந்த மக்கள் 14,000 பேர் மரணமடைந்தனர். எனினும், 199 வருடங்களுக்கு பின்னராவது நட்டஈடு கோருவது நியாயமானதாகும்” என்றார்.  

சுதந்திரப் போராட்டத்தின் போது, ஊவாவை போல, பாதிக்கப்பட்ட பிரதேசம், இலங்கையில் எங்குமே இல்லை என்றும் முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .