2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பதிவேடு

Princiya Dixci   / 2015 நவம்பர் 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவெல

கலேவெல பொலிஸ் பிரிவில், கலேவெல வீதியில் சிறியரக டிரக்டர் வண்டியொன்று புரண்டு விபத்துக்குள்ளானதில் 33 வயதான மங்கள ராஜபக்ஷ மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கரல்ல

தம்புள்ளை-குருநாகல் வீதியில் பன்னல கொஸ்லந்த வத்தை சந்திக்கு அருகில் குருநாகல் பிரதேசத்தில் இருந்து வந்த லொறியொன்று, வீதியை கடக்க முயன்ற பொல்ஹாவல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான லால் ராஜபக்ஷ மரணமடைந்துள்ளார்.

நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கடே சந்திப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ஒன்றையும் அதற்கான ரவைகள் மூன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

களுத்துறை

பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடாரம்ப பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்டர் ஷரிகயே துப்பாக்கி மற்றும் 12 போர-12, ரவைகள் 2 மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுரலிய

பதுரலிய, கொடேவத்தை பிரதேசத்தில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த வீதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் சென்றுக்கொண்டிருந்த 51 வயதான சுமித்ரா டயஸ், 7 வயதான நிஷாந்தி ஹங்சனி ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளனர். 

கொஸ்கொட

கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேகல்ல  பிரசேத்தில் உள்ள குடும்பமொன்றில், குடும்ப பிரச்சினை காரணமாக கணவனால் தாக்கப்பட்ட அவருடைய மனைவியான 23 வயதான காஞ்சனா பிரியதர்ஷனி மரணமடைந்துள்ளார். 

வெள்ளிக்கிழமை இரவு 10.45க்கு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பொலிஸ் கடல் பிரிவு

களனி கங்கை, பொல்கொட ஏரியில் கழிவுகளை கொட்டிய நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் கடல்பிரிவு அறிவித்துள்ளது. 

இந்த நால்வரும் வத்தளை மற்றும் மொரட்டுவை நீதவான் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

களனி கங்கைக்குள் கழிவுகளை கொட்டிய பெண்ணொருவர் உட்பட இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, பொல்கொட ஏரியில் கழிவுகளை கொட்டிய இருவரும் எதிர்வரும் 9ஆம் திகதியன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தினால் ஆஜராகுமாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X