2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பொலிஸ் வைத்தியசாலையில் திருட்டு

George   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் வைத்தியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவான மருந்துப் பொருள்கள் திருட்டுப் போயுள்ளன.

சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மருந்து பொருட்களை காணவில்லை என, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது, இது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸ் வைத்தியசாலையில் இடம்பெற்ற மருந்து திருட்டு சம்பவத்தை விசாரணைசெய்த நிலையில், இந்த பாரியளவான மருந்துகள் காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் 5 இலட்சம் பெறுமதியாக மருந்துகள் திருட்டுப் போயுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X