2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மக்களை கதிகலங்க வைக்கும் திருடன்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தங்க நகை திருடனால், மாலபே - கஹந்தோட்டை பிரதேசத்திலுள்ள  மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் பல தடவைகள் புகுந்து பல்வேறு பொருட்களை திருடியுள்ளார்.

இந்த சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பியகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளார்.

 மாலபே கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் இருந்த பெண் ஒருவரிடமும், வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் தங்க நகைகளையும் சந்தேக நபர் நேற்று முன்தினம் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X