2026 மார்ச் 30, திங்கட்கிழமை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

Freelancer   / 2026 மார்ச் 28 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனப் பதிவு முறைகேடுகள் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுக்கட்டமைப்பில் சட்டவிரோதமான முறையில் மாற்றங்களைச் செய்து, வாகனங்களைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் .

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் சில உயர் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆணையாளர் நாயகமும் கைது செய்யப்பட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .