2026 மே 20, புதன்கிழமை

மோடியை ’பாம்பு வித்தைக்காரராக’ சித்தரித்ததால் பெரும் சர்ச்சை

Editorial   / 2026 மே 20 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

  நோர்வே நாட்டின் முன்னணி நாளிதழ் ஒன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் 'பாம்பு வித்தைக்காரர்' போலச் சித்தரித்து இனவெறி கார்ட்டூன் (கேலிச்சித்திரம்) ஒன்றை வெளியிட்டுள்ளது. இது, மேற்கத்திய நாடுகளின் பழைமைவாதப் பொதுப்புத்தியை (Stereotypes) மீண்டும் பிரதிபலிப்பதாகக் கூறிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வே நாட்டிற்குப் பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றது தொடர்பாக ஏற்பட்ட மோதலின் பின்னணியில் இந்தச் சர்ச்சை வெடித்துள்ளது.

'ஆஃப்டன்போஸ்டன்' (Aftenposten) என்ற அந்த நோர்வே நாளிதழில், "ஒரு புத்திசாலி மற்றும் சற்று எரிச்சலூட்டும் மனிதர்" (A clever and slightly annoying man) என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கட்டுரை வெளியானது. அதற்கு அருகிலேயே, பிரதமர் மோடி எரிபொருள் நிரப்பும் குழாய் ஒன்றைப் பாம்பு போலப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இதுவே தற்போதைய பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரு டன் இணைந்து பிரதமர் மோடி நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த மோதல் தொடங்கியது. அப்போது, நோர்வே நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஹெல்லே லிங் என்பவர், "இந்தியாவில் பிரதமர் மோடி ஏன் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கிறார்?" என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பிரதமர் மோடி நேரடியாகப் பதிலளிக்கவில்லை. எனினும், இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, நோர்வேக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் மூலமாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X