Editorial / 2026 மே 20 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாக்ஷர கௌசிக குருகுலத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவும், குருகுல மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவையில் வெகுவிமரிசையாக கடந்த 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருகோணமலை இலிங்க நகர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் பிரதம குருவும், 'வித்யாபூஷணம்' பிரம்மஸ்ரீ பா. சிவானந்த சர்மாவின் (கோப்பாய் சிவம்) மாணவருமாகிய சிவப்பிரம்மஸ்ரீ ந. வருண் சிவா சர்மா விசேட சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அவர் சிறந்த முறையில் வேத மற்றும் ஆகமக் கல்வியை சம்ஸ்கிருதம், கிரந்த மொழிகளில் முறையாகக் கற்றுத் தேர்ந்தமைக்காக முதன்மைச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, விழாவில் நடைபெற்ற ஆகம கிரியா வினாடி-வினாப் போட்டிப் பரீட்சையிலும் பங்கேற்றிருந்தார்.
இப்போட்டியில், தன் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தித் தனது குழுவையும் தன்னையும் முதலிடத்திற்கு இட்டுச் சென்று வெற்றியைத் தன்வசமாக்கியதுடன், ஒட்டுமொத்தப் போட்டிப் புள்ளிகளின் அடிப்படையிலும் அவர் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதற்கான விசேட சான்றிதழ்களும் அவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
சிறப்பான சாதனைகளைப் புரிந்து ஆலயத்திற்கும் திருகோணமலை மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ள எமது ஆலயப் பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ ந. வருண் சிவா சர்மாவுக்கு, எமது ஆலயம், ஆலய நிர்வாகச் சபை, இலிங்க நகர் மக்கள் மற்றும் திருகோணமலை இந்து சமயப் பேரவை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago