Janu / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி உள் நுழைய முற்பட்ட ஒருவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு தகாத வார்த்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த, தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக சனிக்கிழமை (26) அன்று பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் உதவி ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிலும் குறித்த பாடசாலையின் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
பாடசாலை ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் மற்றும் காலை கூட்டம் இடம்பெறும் அப்போது பிந்தி வரும் மாணவர்களை காலைக்கூட்டம் முடியும் வரை நிறுத்தி வைப்பது வழமையானதாகும்.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை (25) காலை பாடசாலை ஆரம்பித்து காலைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது குறித்த வேட்பாளர் அவரது பிள்ளையை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு பிந்தி வந்த மாணவர்களை நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதன் போது பிந்தி சென்ற அவரது பிள்ளை பாடசாலைக்குள் செல்ல வேண்டும் என பாடசாலை வளாகத்தினுள் அத்துமீறி உள் நுழைய முற்பட்ட போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களை தகாத வார்த்தை பிரயோகித்து தான் கட்சி ஒன்றின் வேட்பாளர் என தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் மாவட்ட தேர்தல் உதவி ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிலும் குறித்த பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
6 minute ago
10 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
14 minute ago
18 minute ago