George / 2017 மே 30 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண காலநிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் 7 மாவட்டங்களில் 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மண்சரிவு இடம்பெறலாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 24 மணித்தியால மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு சற்றுமுன்னர் விடுத்துள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களிலேயே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனர்த்தங்களால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 188ஆக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தோர் எண்ணிக்கை 112ஆகவும் காணாமற்போனோர் தொகை 99ஆகவும் அதிகரித்துள்ளதென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025