2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மினுவாங்கொடையில் ஆயுத களஞ்சியசாலை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 16 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்படும் தினசரி சோதனை நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று (15) இடம்பெற்றது. 

இதன்போது, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 01, T-56 துப்பாக்கி, T-56 துப்பாக்கிக்கான 01 மெகசின், 14, T-56 தோட்டாக்கள், 01 பிஸ்டல் துப்பாக்கி, 01 மெகசின், 09, 2.5 mm தோட்டாக்கள், 09, 9 mm தோட்டாக்கள், 02 துப்பாக்கி மாதிரிகள், 03 வாள்கள் மற்றும் 02 கத்திகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X