2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மனைவி மீது துப்பாக்கி சூடு: லெப்டினன் கேணல் கைது

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய, இசுருபுரவில் உள்ள தன்னுடைய வீட்டில் வைத்து மனைவியின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும், துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், அந்தப் பெண்ணின் கணவனான இராணுவ லெப்டினன் கேணல் பிரதீப் குமார தென்னசிங்க, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை (27) இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 45 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

எனினும், அத்துகிருகிரிய பொலிஸ் நிலையத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை, இராணுவ பொலிஸாருடன் வருகைதந்து லெப்டினன் கேணல் சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் அளித்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .