Janu / 2026 ஜனவரி 05 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பேருந்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்றும் கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிச் செல்லும் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக 119 அவசர எண் மூலம் திங்கட்கிழமை (05) பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. .
அதன்படி, உடனடியாக செயல்பட்ட கல்கிசை போக்குவரத்து பிரிவு பொலிஸார் கடுபெத்த வீதித் தடைக்கு அருகில் பேருந்தை நிறுத்தி முழுமையான சோதனைக்கு உட்படுத்தியதுடன் இதன்போது சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது மிரட்டல் நடவடிக்கையா அல்லது குற்றம் செய்வதற்கான திட்டமா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, மேலும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபரைக் கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
47 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
4 hours ago