2026 மே 04, திங்கட்கிழமை

மரபணு பரிசோதனை முடிவு வெளியானது

J.A. George   / 2021 மார்ச் 15 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவல பகுதியில் காரொன்றில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், 33 வயது வர்த்தகருடையது என மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

வர்த்தகரின் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொஹுவல, ஆசிரி மாவத்தையில் கடந்த 10 ஆம் திகதி  இரவு 11.30 மணியளவில் கார் ஒன்றினுள் எரியுண்ட நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைகள் நாளை நடத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும்  ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .