Mithuna / 2024 ஜனவரி 10 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடிசா மாநில உயர் நீதிமன்றில், ஒருவர், தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை.
இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி மருத்துவர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் ஒடிசா அரசுக்கு ஒரு உத்தரவையும் பிறப்பித்தார். "அனைத்து மருத்துவர்களும் மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், சட்ட அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும். முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்குமாறு தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026