Editorial / 2024 ஜூலை 02 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

காதலியான பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் மதுரா தொகுதியில் கவுன்சிலர் ஆவார்.
கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபருடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.
இதனால் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.
அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக தெரிகிறது.
இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டார். கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026