2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி முறைப்பாடு

George   / 2017 ஜனவரி 04 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 330 பில்லியன் ரூபாய்க்கு, சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்தமை தொடர்பாக, அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஒன்றிணைந்த எதிரணியினரால்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஆரம்பக் கட்ட நிர்மாணப்பணிகளுக்காக பெறப்பட்ட 1.1 பில்லியன் ரூபாய் கடனை மீளச் செலுத்துவதற்காக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று எம்.பி மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பாக, இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது, அவர் இவ்வாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .